சம்பந்தனுக்கு இன்று 86ஆவது பிறந்த நாள்! மஹிந்த தொலைபேசியில் வாழ்த்து

Report Print Rakesh in அரசியல்

நீங்கள் நீண்ட ஆயுளோடு நலமாகவாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இராஜோதயம் சம்பந்தனின் 86 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.

இதனையொட்டி இன்று காலை ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்களும், வெளிநாட்டு இராஜதந்திரிகளும் பிறந்தநாள் நாயகனுக்கு தொலைபேசிமூலம் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

சம்பந்தன் எம்.பிக்கு அழைப்பை ஏற்படுத்திய மஹிந்த ராஜபக்ச,

"இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீண்ட ஆயுளோடு நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்" என வாழ்த்திவிட்டு, சமகால விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

இதற்கு நன்றி தெரிவித்த சம்பந்தன் எம்.பி., நாடாளுமன்றத்தில் வைத்து நேரில் சந்திக்கின்றேன் என கூறியுள்ளார்.

Latest Offers