90 மில்லியன் ரூபாய்களை சம்பளமாக பெறும் ஹத்துருசிங்கவை நீக்க நடவடிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கை கிரிக்கட் அணியில் பிரச்சினைகள் தொடர்ந்துக்கொண்டிருக்கின்றன.

இந்தநிலையில் இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளும் முன்னர் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனடிப்படையில் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க, அணித்தலைவர் தினேஸ் சந்திமல் உட்பட்ட பலர் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவுக்கு நெருக்கமான தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன.

ஹத்துருசிங்கவுக்கு வருடாந்த சம்பளமாக 90 மில்லியன் ரூபாய்கள் 2018ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளன.

எனினும் அவரின் பயிற்றுவிப்பின்கீழ் இலங்கை கிரிக்கட் அணி தாழ்ந்த பெறுபேற்றை பெற்றுள்ளது.

எனவே ஹத்துருசிங்கவின் உடன்படிக்கையை ரத்துச்செய்வதற்கு சட்டமா அதிபரின் உதவிக்கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers