ஜனாதிபதியின் யாழ். நோக்கிய பயணம் ரத்து

Report Print Sumi in அரசியல்

யாழ். மாவட்ட செயலகத்தில் நாளைய தினம் இடம்பெறவிருக்கும் கிராம சக்தி கலந்துரையாடலில் பங்கேற்கவிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில் அவரது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தன.

ஜனாதிபதியின் கொலைசதி வழக்கு, விசாரணையில் உள்ள நிலையிலே அவரது பாதுகாப்பினை கருத்திற் கொண்டு யாழில் அவர் செல்லும் இடங்களை அண்டிய பிரதேசங்களில் குடியிருப்பாளர்கள் மற்றும் நிறுவனங்களின் விவரங்களை சேகரிக்குமாறு ஜனாதிபதி செயலகத்தினால் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

இந்தநிலையில் ஜனாதிபதி செல்லும் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், அரச - தனியார் நிறுவனங்கள், பொது அமைப்புக்கள் மற்றும் வெளியிடங்களிலிருந்து வந்து செல்வோர் தொடர்பான விவரங்களை பொலிஸார் அவசர அவசரமாக திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தொடர்ந்து அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்குச் செல்வதுடன், அங்கிருந்து அச்சுவேலி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் இடம்பெறும் கிராம சக்தி திட்டம் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி கலந்துக்கொள்ளவிருந்த விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.