சுமந்திரன் - சம்பந்தனின் தீவிர முயற்சி! இதுவே இறுதி தூக்குக் கயிறு

Report Print Jeslin Jeslin in அரசியல்

சுமந்திரன், சம்பந்தன் உள்ளிட்டோர் நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பைத் தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபடுகின்றனர் என வியத்மக அமைப்பைச் சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணியும் திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளருமான ராஜகுணரத்ன தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான வியத்மக அமைப்பினால் கொழும்பில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்திலேயே இத்தகையதொரு மோசமான விளைவுகளை ஏற்படுத்தத்தக்க அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதை அவர்கள் சுமந்திரன் மற்றும் சம்பந்தன் உள்ளிட்டவர்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு என்பது எமது நாட்டு மக்களின் கழுத்திற்கு போடப்படுகின்ற இறுதித் தூக்குக்கயிறாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.