இலங்கை தொடர்பில் ஐ.நா கடும் அதிருப்தி!

Report Print Murali Murali in அரசியல்

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

பொறுப்புக்கூறல் செயல்முறையில் இலங்கை வேகமான முன்னேற்றங்களை காண்பிக்கவில்லை என சுட்டிக்காட்டி தனது அதிருப்தியை அவர் வெளியிட்டுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பசெலெட் ஜெனிவாவில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இதன் போது அவர் இலங்கை குறித்து அதிருத்தி வெளியிட்டுள்ளார். “இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் செயல்முறைகளில் சில முன்னேற்றங்களையே எட்டியுள்ளது.

அத்துடன், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை மெதுவாகவே செயற்படுவதாகவும், சீரான அணுகுமுறையை கடைப்பிடிக்கவில்லை” எனவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers