ஜனாதிபதி ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை! எம்.ஏ.சுமந்திரன் கேள்வி

Report Print Murali Murali in அரசியல்

பாரிய நிதிமோசடி குறித்து ஜனாதிபதியின் கைகளில் குற்றவாளிகளின் பெயர்கள் இருந்தும் கூட ஏன் இன்னும் அவர்கள் தண்டிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

பாரிய நிதி மோசடி மற்றும் மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழு அறிக்கை மீதான சபை ஒத்துவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“பாரிய நிதிமோசடி குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு ஆதாரபூர்வமாக தகவல்களை முன்வைத்தும், குற்றவாளிகள் பெயர்கள் சுட்டிக்காட்டப்பட்டும் ஜனாதிபதியின் கைகளில் குற்றவாளியின் பெயர்கள் இருக்கின்றன.

எனினும், அவர்கள் ஏன் இன்னும் தண்டிக்கப்படவில்லை. குற்றமிழைத்தவர் தண்டிக்கப்பட ஏன் இவ்வளவு கால தாமதம்? ஆணைக்குழு தயாரித்த இந்த அறிக்கையின் பலன் என்ன?

களவுகளை கண்டறிய ஆணைக்குழு அமைத்து ஆணைக்குழு நேரத்தை கடத்த அரச நிதியை வீணடித்து இறுதியில் எந்த பலனும் இல்லையென்றால் இவற்றை ஏன் நாம் செய்கின்றோம்.

குற்றச்சாட்டுக்கள் ஆதரங்களுடன் உள்ளன, பல குற்றங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் அறிக்கையாக ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

இப்போது இவற்றை குப்பைத்தொட்டியில் போட முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.