இலங்கை தொடர்பில் பிரித்தானியா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

Report Print Murali Murali in அரசியல்

இலங்கையை சுயாதீனமாக இயங்குவதற்கு சர்வதேச நாடுகள் அனுமதிக்க வேண்டும் என்று பிரித்தானிய பிரபுகள் சபை உறுப்பினர் லோர்ட் நெசபி கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்றை சுட்டிக்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றை விரிவாக்குவதற்கான பிரேரணை 2015ம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து, குறித்த பிரேரணையின் பரிந்துரை அமுல் படுத்துவதற்கான கால நீடிப்பு கருதி 2017ம் மார்ச் மாதம் மற்றுமொரு பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், குறித்த பிரேரணையின் நான்கு பொறிமுறைகளை நோக்கி சாதகமான அடிகளை இலங்கை அரசாங்கம் எடுத்து வைத்திருக்கிறது என்று லோர்ட் நெசபி கூறியுள்ளார்.

ஆகையினால் இலங்கையை சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அத்துடன், இலங்கையை பிரித்தானியா நட்பு நாடாக அணுக வேண்டும்.

எவ்வாறாயினும், இந்த நட்பு ப்ரெக்ஸிட்டின் பின்னர் அவசியப்படும்” என லோர்ட் நெசபி குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.