மைத்திரியை இன்று சந்திக்கும் மஹிந்த!

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடத்தப்பட உள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அனைத்து கட்சித் தலைவர்களையும் ஜனாதிபதி இன்று சந்திக்க உள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்றைய தினம் மாலை இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

உத்தேச அரசியல் கூட்டணி, மாகாண சபை தேர்தலை எவ்வாறு எதிர்நோக்குவது உள்ளிட்ட பல முக்கியமான அரசியல் காரணிகள் தொடர்பில் இன்றைய சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் ஜனாதிபதி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.