ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி மே மாதம் ஆரம்பம்?

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணி எதிர்வரும் மே மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி இந்த விரிவான அரசியல் கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்று தெரிவித்துள்ளார்.

ஜனநாயக தேசிய முன்னணி என்ற பெயரில் இந்த விரிவான கூட்டணி அழைக்கப்படும் என அவர் கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பத்து பேர் கொண்ட தலைமைத்துவ பேரவையொன்று உருவாக்கப்படும் எனவும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம் மற்றும் பழனி திகாம்பரம், மனோ கணேசன், ரிசாட் பதியூதீன், ராஜித சேனாரட்ன மற்றும் அர்ஜூன ரணதுங்க உள்ளிட்டவர்கள் இந்த தலைமைத்துவ பேரவையில் அங்கம் வகிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.