நாடாளுமன்றில் பெரும்பான்மை பெற்றுக்கொள்ள ஐ.தே.க முயற்சியா?

Report Print Kamel Kamel in அரசியல்

நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்வதற்கு தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

நாடாளுமன்றில் தற்பொழுது கட்சிகள் வகிக்கும் ஆசனங்களின் அடிப்படையில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடையாது.

அரசாங்கத்தை பலப்படுத்தும் நோக்கில் தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட வகையிலேயே ஐக்கிய தேசிய முன்னணி தேசிய அரசாங்கத்தை உருவாக்குகின்றது.

இந்த விடயம் தொடர்பில் எவருக்கும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.