இதற்கு நான் இடமளிக்க போவதில்லை! மகிந்த உறுதி

Report Print Jeslin Jeslin in அரசியல்
195Shares

ஜனாதிபதி தேர்தலையோ பொதுத்தேர்தலையோ பிற்போடுவதற்கு தான் இடமளிக்க போவதில்லையென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் வானொலி நிகழ்ச்சியொன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் தினத்தை முன்கூட்டியே நேரகாலத்துடன் அறிவிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலத்தில் திருத்தம் செய்து, பழைய முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின், அது தொடர்பான திருத்த யோசனை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்த நிலையில், அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என ஆளும் கட்சியான ஐக்கிய தேசிய முன்னணி தெரிவித்து வருகிறது. வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவை மாகாணங்களில் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது.

மேல், தென் மற்றும் ஊவா மாகாண சபைகளின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடையவுள்ளது. இந்த மாகாண சபைகளின் பதவிக்காலம் முடியும் முன்னர் அவற்றை கலைத்து விட்டு, அனைத்து மாகாண சபைகளுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.