தமிழ் பெண் அதிகாரிக்காக ஒன்றிணைந்த மஹிந்தவின் சகாக்கள்! தப்புவாரா அமைச்சர்?

Report Print Vethu Vethu in அரசியல்

சுங்கப் பிரிவு பணிப்பாளரை பணி நீக்கம் செய்த அமைச்சர், தனது பதவி இராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுங்க பிரிவு ஊழியர்களின் போராட்டம் காரணமாக இலங்கைக்கு பல பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

சுங்கப் பிரிவு பணிப்பாளர் நாயகம் மோசடி குடும்பலின் மோசடிகளை அம்பலப்படுத்த முயற்சித்தமையினால் அவரை பதவி நீக்கம் செய்துள்ளனர்.

பின்னர் அவரை மீண்டும் அந்த பதவியில் நியமித்துள்ளனர். அவரை மீண்டும் நியமித்ததன் ஊடாக பணி நீக்கம் செய்த அமைச்சர் குற்றவாளியாகின்றார்.

அவர் குற்றத்தை ஏற்றுக் கொண்டு உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வாசு தேவநாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய பி.எஸ்.எம்.சார்ள்ஸ், திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

எனினும், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சுங்க திணைக்களத்தினர் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதனையடுத்து திருமதி சார்ள்ஸ் மீண்டும் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.