ஐ.தே.முன்னணியினரின் கூட்டத்தில் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள்! மீண்டும் தேசிய அரசா?

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஐக்கிய தேசிய முன்னணியினரால் நேற்று நடத்தப்பட்ட கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் ஆதரவு தேசிய அரசாங்கத்திற்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய அரசாங்கத்திற்கு ஜனாதிபதியின் எதிர்ப்பு தொடர்பில் குறித்த கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜக்ச தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு வருவது பற்றி பேசப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி காட்டி வரும் அச்சம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.