அபிவிருத்தி வழிமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று நாடாளுமன்றத்தின் 2ஆவது குழு அறையில் நடைபெற்றது.
இதன்போது அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் நடந்துள்ள முறைகேடுகளை ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட வேண்டும் என வீரவங்ச யோசனை முன்வைத்துள்ளார்.
எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களின் கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாடி தீர்மானத்தை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.