பிரதமர் விடுத்த கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சர் றிசார்ட் பதியூதீனுக்கு நிபுணத்துவ அபிவிருத்தி அமைச்சு பதவியை வழங்குமாறு பிரதமரின் செயலகம் விடுத்திருந்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று குறித்த யோசனை முன்வைக்கப்பட்டதுடன், ஜனாதிபதி அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

நிபுணத்துவ அபிவிருத்தி அமைச்சு பதவி தற்போது பிரதமரின் பொறுப்பின் கீழ் உள்ளது. றிசார்ட் பதியூதீன் ஏற்கனவே கைத்தொழில், வணிகம், நீண்டகாலம் இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

மேலும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் சம்பந்தமாகவும் ஜனாதிபதி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Latest Offers