குற்றவாளிகளைத் தண்டிக்க தயங்குகின்றார் ஜனாதிபதி!

Report Print Rakesh in அரசியல்

பெரும் நிதிமோசடி குறித்து ஜனாதிபதியின் கைகளில் குற்றவாளியின் பெயர்கள் இருந்தும் கூட ஏன் இன்னும் அவர்கள் தண்டிக்கப்படவில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெரும் நிதி மோசடி மற்றும் மத்திய வங்கிப் பிணைமுறி ஆணைக்குழு அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து நேற்று நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"குற்றமிழைத்தவர் தண்டிக்கப்பட ஏன் இவ்வளவு கால தாமதம்? ஆணைக்குழு தயாரித்த இந்த அறிக்கையின் பலன் என்ன?

குற்றச்சாட்டுக்கள் ஆதரங்களுடன் உள்ளன. பல குற்றங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் அறிக்கையாக ஜனாதிபதிக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது. இப்போது இவற்றை குப்பைத்தொட்டியில் போட முடியாது.

இந்த ஆணைக்குழுக்களுக்கும், அதன் அறிக்கைகளுக்கும் என பொதுமக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதனால் நேரமும், பணமும் வீணடிக்கப்பட்டுள்ளது" எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers