மக்களின் வாழக்கையை மேம்படுத்துவதற்காகவும் கடந்த வருடங்களில் திட்டமிட்ட அபிவிருத்தி யோசனை திட்டங்களை தங்கு தடையின்றி முன்னெடுத்துச் செல்லவும், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கோட்டே பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளரிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
வேறு கட்சிகளின் ஒத்துழைப்புடன் ஜனாதிபதி தலைமையிலான தேசிய அரசாங்கம் பதவி வகித்தது.
எதிர்காலத்தில் அமைக்கப்படும் அரசாங்கமும் ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்புடன் அமைக்கப்படும்.
அரசாங்கம் வலுவாக இருக்க நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பது முக்கியம். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க ஏற்கனவே இருந்த தேசிய அரசாங்கத்தை விட வலுவான, நிலையான அரசாங்கமாக புதிய தேசிய அரசாங்கம் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.