பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அமைச்சர் சாகல ரத்னாயக்கவுக்கும் இடையில் பிரதமர் அலுவலகத்தில் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் எதிர்காலத்தில் நடைப்பெறவுள்ள 'யோவுன்புரய 2019' நிகழ்வின் ஏற்பாடு தொடர்பாக இடம்பெற்றுள்ளது.
'யோவுன்புரய' நிகழ்ச்சி திட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முன்மொழிவுக்கமைய ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழ்ச்சி திட்டம் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதி முதல் 31ஆம் நாள் வரையில் வீரவில தேசிய கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி சபையின் பண்ணை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
யோவுன்புர நிகழ்ச்சியின் பிரதான நோக்கம் இலங்கை இளைஞர், யுவதிகளிடையே தேசிய நல்லிணக்கம் தொடர்பாக அறிவூட்டல் மற்றும் கருத்து பரிமாறலை உருவாக்கி போதைக்கு அடிமையாகாத இளந்தலைமுறையினை உருவாக்கல் ஆகும்.