மகிந்தவுக்கு அடுத்து கோத்தபாயவுக்கே தகுதி இருக்கின்றது - விமல் வீரவங்ச

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தகுதியான நபர் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

மீகொட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தல் இன்னும் 9 மாதங்களில் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அடுத்ததாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தகுதியான நபர் கோத்தபாய ராஜபக்ச.

அவர் வேலை செய்ய முடியும் என்று செய்து காட்டிய தலைவர்.

கதையை மட்டும் பேசிய தலைவர் அல்ல.கோத்தபாய ராஜபக்ச, மகிந்த ராஜபக்சவின் ஆசியுடன் முப்படையினரை முகாமைத்துவம் செய்து, பயங்கரவாதத்தை ஒழித்த தலைவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers