மகிந்தவின் அரசியல் தந்திரம்! வடிவேல் சொல்லும் காரணம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பலர் பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பள விவகாரத்தை கொண்டு அரசியல் நடத்த முற்படுவதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் மலையகத்தை பிரதிநித்துவப்படுத்தும் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக செயற்பட்டு அவர்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதாகவும் அவர் இதன்போது தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.