கிழக்கு மாகாண ஆளுநருக்கும் சட்டத்தரணிக்குமிடையில் சந்திப்பு

Report Print Mubarak in அரசியல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவிற்கும் சட்டத்தரணி அமானுல்லாஹ்க்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் வேண்டுகோளின் பேரில் சட்டத்தரணி அமானுல்லாஹ் வருகை தந்து ஆளுநருக்கு விளக்கமளித்துள்ளார்.

இதன் போது அவர், பிரதேச காணி விடயம் தொடர்பாகவும், காணி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஆளுநரிடம் எடுத்துரைத்தார்.

இதன்போது கலேவல பிரதேச சபை உறுப்பினர் மௌபீத் கலந்துகொண்டார்.