தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனை குறித்த விவாதம் நாளை

Report Print Steephen Steephen in அரசியல்

தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனை நாளைய தினம் விவாதத்திற்கு எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் முழுவதும் நாடாளுமன்றத்தில் இந்த யோசனை தொடர்பான விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளருமான அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாளைய நாள் முழுவதும் நாடாளுமன்றத்தில் இருந்து கட்டாயம் யோசனைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தும் அறிவித்தல் ஒன்றை அமைச்சர் கருணாதிலக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ளார்.

Latest Offers