அரசாங்கத்தை ஸ்திரப்படுத்த அமைச்சு பதவிகளை அதிகரிக்க வேண்டும்

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கத்தை ஸ்திரப்படுத்துவதற்காக விருப்பமின்றியேனும் அமைச்சு பதவிகளை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் குறிப்பிடத்தக்க பெரும்பான்மை பலம் இல்லை.

அரசாங்கத்தை ஸ்திரப்படுத்துவதற்காக தேசிய அரசாங்கம் அமைக்கப்பட உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். அவர்களின் உதவியை பெற்று அரசாங்கம் ஸ்திரப்படுத்தப்படும்.

அரசாங்கதில் இணையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க நேரிடும். தேசிய அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் அமைச்சுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும் எனவும் ஹர்சன ராஜகருண குறிப்பிட்டுள்ளார்.