மதுஷ் தொடர்பாக துபாய் அரசுடன் பேச்சுவார்த்தை!

Report Print Steephen Steephen in அரசியல்
220Shares

கைது செய்யப்பட்டுள்ள மாகந்துரே மதுஷ் என்ற பாதாள உலகக்குழு தலைவர் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து துபாய் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மதுஷ் சம்பந்தமாக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மாகந்துரே மதுஷ் கைது செய்யப்படடுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

எனினும், ராஜதந்திர ரீதியில் இதுவரை அறிவிக்கப்படவில்லை. துபாய் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

இந்நிலையில், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் நடவடிக்கை எடுக்க முடியும் என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.