கொழும்பு துறைமுக பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சாகல ரட்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துறைமுக அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.