குற்றங்கள் தொடர்பில் பேச ரணில், மகிந்தவிற்கு அருகதை இல்லை!

Report Print Ajith Ajith in அரசியல்
95Shares

போதைப்பொருள் வர்த்தகர் மதுஷ் துபாயில் கைதுசெய்யப்பட்டமையை போன்று வெளிநாடுகளில் தங்கியுள்ள ஏனைய குற்றவாளிகளையும் ஏன் கைதுசெய்யமுடியாது என்று ஜே.வி.பி கேள்வி எழுப்பியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சுனில் ஹந்துன்நெத்தி இந்தக்கேள்வியை எழுப்பினார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மத்திய வங்கி முறி விற்பனை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமான அர்ஜூன் மகேந்திரன், மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான உதயங்க வீரதுங்க மற்றும் ஜாலிய விக்கிரமசூரிய ஆகியோரை ஏன் கைது செய்ய முடியவில்லை.

இந்த நிலையில் குற்றங்கள் தொடர்பில் பிரதமர் ரணிலுக்கோ, எதிர்க்கட்சி தலைவர் மகிந்தவிற்கோ கருத்துக்களை கூற முடியாது என்றும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டார்.