ரணிலிற்கு எதிராக நீதிமன்றை நாடவுள்ள மைத்திரி

Report Print Murali Murali in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாகாண சபை தேர்தலை நடத்தாது, வேண்டும் என்றே இழுத்தடிக்கின்றார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில், தேர்தலை விரைவாக நடத்தாது இழுத்தடித்தால் நீதிமன்றம் சென்றே முடிவு காணவேண்டி வரும் எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சித் தலைவர்கள் கூட்டம் கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் இன்று மாலை இடம்பெற்றது.

இதில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன் போது கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “ரணில் என்னை சீண்டுகிறார். அத்துடன், மாகாண சபைத் தேர்தலை நடத்தாது வேண்டுமென்றே இழுத்தடிக்கின்றார்.

இந்நிலையில், மாகாண தேர்தலை ஒரே நாளில் நடத்தவேண்டுமென நான் அமைச்சரவையை கேட்டுள்ளேன். எனினும், தேர்தலை நடத்தாது இழுத்தடித்தால் நீதிமன்றம் சென்றே முடிவு காண வேண்டிவரும்” என மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த சந்திப்பின் போது சமகால அரசியல் நிலவரம், புதிய கூட்டணி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.