நிச்சயம் எங்களால் வெற்றிபெறமுடியும்! பசில் சவால்

Report Print Murali Murali in அரசியல்

எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது உறுதி என அந்த கட்சியின் தவிசாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கூட்டணி அமைக்காமலேயே இவ்வாறு வெற்றியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுடனான சந்திப்பு நெலும் மாவத்தையில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “தாமரை மொட்டும், கை சின்னமும் ஒன்றாகா விடினும் தேர்தலை எங்களால் நிச்சயம் வெற்றி கொள்ள முடியும்.

இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர எந்தவொரு தேர்தலிலும் தாமரை மொட்டுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகவுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் இல்லாவிட்டாலும் எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் வெற்றிகொள்ளக் கூடிய ஆளுமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு உள்ளது.

எனினும், இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்தால் ஐக்கிய தேசிய கட்சி படு தோல்வியை சந்திக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்.