இரு வாரங்களில் அதிர்ச்சித் தகவல்கள் அம்பலமாகும்! பகிரங்கமாக தெரிவித்த மைத்திரி

Report Print Rakesh in அரசியல்

தன்னையும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சிகள் தொடர்பான முழுமையான அதிர்ச்சி தகவல்கள் இரு வாரங்களில் அம்பலமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குற்றவாளிகளை ஒப்படைத்தல் சட்டத்தின் கீழ் கட்டளை விதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

என்னிடமே பாதுகாப்பு அமைச்சு இருப்பதனால் என்னையும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சிகள் தொடர்பாக என்னிடமே கேட்டறிந்து கொள்ளுமாறு அமைச்சர் ரிஷாத்பதியுதீன் இங்கு குறிப்பிட்டார்.

இந்த படுகொலைச் சூழ்ச்சிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முறையாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர்தான் என்னிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். இப்படுகொலை சூழ்ச்சிகள் தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் இன்னும் இரு வாரங்களில்அம்பலமாகும். அப்போது நாட்டு மக்கள் பல விடயங்களை அறிந்து கொள்ள முடியும் என கூறியுள்ளார்.