நாடாளுமன்றத்தில் உயிர் பறிக்கும் அபாயமா? சபாநாயகரை திண்டாட வைத்த எதிர்க்கட்சி

Report Print Jeslin Jeslin in அரசியல்

லிப்ட் ஒன்றை ஒழுங்காக செய்ய முடியாத நாடாளுமன்றமாக இது மாறிவிட்டதா என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச,தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, தயாசிறி ஜயசேகர, சந்திம வீரக்கொடி உட்பட்ட பல எம்.பிக்கள் நாடாளுமன்ற லிப்ட்டில் சுமார் 25 நிமிடம் சிக்கிக் கொண்டனர்.

இது தொடர்பிலேயே தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

உயிர்களை எடுக்கும் சதியாக இது இருக்கலாம் என்பதால் சபாநாயகர் இதனூடாக செல்லும்போது கவனமாக இருக்கவேண்டுமென அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, நேரம் வந்தால் போக வேண்டி வரும் என்று புன்னகையுடன் பதிலளித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி வேட்பாளராக வரப்போவதாக சொல்லப்படும் சபாநாயகர் இதில் கவனமாக செல்லவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இதன்போது குறிப்பிட்டுள்ளார்.