அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை தேடும் ரணில்

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கு சாதகமற்ற சந்தர்ப்பங்களில் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும் சாதகமான சந்தர்ப்பங்களில் அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்கத்தின் புதிய தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உண்மையில் ஜனநாயகத்தை காப்பவர் அல்ல. தனக்கு சாதகமற்ற சந்தர்ப்பங்களில் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கின்றார்.

தனக்கு சாதமான சந்தர்ப்பங்களில் அரசியலமைப்புச் சட்டத்தை மீற அதில் உள்ள ஓட்டைகளை தேடுகிறார் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers