மாகந்துரே மதுஷ் மற்றும் அவரின் சகாக்களின் கைது: நீண்டகால திட்டத்தின் இறுதி கட்ட வெற்றி

Report Print Gokulan Gokulan in அரசியல்

முன்னனி குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வர்த்தகரான மாகந்துரே மதுஷ் மற்றும் அவரின் சகாக்களை கைதுச் செய்தமை நீண்டகால திட்டத்தின் இறுதி கட்ட வெற்றியென அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் இன்று மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

சுயாதீனமான பொலிஸ் ஆணைக்குழு மூலமாக பொலிஸ் சேவையின் சுயாதீனத்தன்மை நிலைநாட்டப்பட்டுள்ளது. நவீன பயிற்சிகள் மற்றும் அடிப்படை வசதிகளை முன்னேற்றியமையால் இத்திட்டத்தில் வெற்றிக்கொள்ள முடிந்தது.

மூத்த சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம். ஆர். லத்தீப்னின் வழிக்காட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இத்தீடீர் சோதனை பிரிவானது ரத்னாயக்க சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக இருந்த காலத்தில் நிறுவப்பட்டமை விசேடம்சமாகும்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை, போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவு ஆகியன அமைச்சரினால் ஓர் பிரிவாக அறிவிக்கப்பட்டது.

இப்பிரிவினை அமைக்கும் பொழுது இதற்கு உகந்த தலைவர் லதீப் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். எனவே, அவரை அப்பதவிக்கு தேர்ந்தெடுத்தோம். இவ்வாறன ஒரு குற்றவாளியை கைதுச்செய்வோம் என்ற நோக்கத்துடன் மிகவும் பொறுமையாக செயற்பட வேண்டுமென அமைச்சர் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துரைத்து அமைச்சர், இப்பிரிவின் அதிகாரிகள் நீண்ட காலமாக மதுஷ் மற்றும் அவரின் சகாக்களை பின்தொடர்ந்தார்கள். அவ் ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் இறுதி தருவாயில் அவர்கள் பொலிஸ் வலையிலிருந்து தப்பித்தார்கள்.

நாம் அரசாங்கத்தை அமைக்கும் போது பல ஆண்டுகளாக பொலிஸ் அதிகாரிகளிற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கவில்லை. உலகிலுள்ள எந்தவொரு நாட்டிலும் பொலிஸ்துறை சிறப்பாக செயற்பட வேண்டுமாயின் அவ்வதிகாரிகளுக்கு கட்டயாமாக பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். நாம் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கினோம்.

எம்முடைய இவ்வேலைதிட்டத்தின் பலாபலன்களை 2017ஆம் ஆண்டு இறுதியில் அனுபவிக்க முடிந்தது. விசேடமாக 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிப்பகுதியில் நூற்றிற்கு 30%வீதம் வரையில் பொலிஸாரால் குறைக்க முடிந்ததென அமைச்சர் தெரிவித்துள்ளார்.