பால் மாவில் பன்றி எண்ணெய் கலக்கப்படவில்லை

Report Print Steephen Steephen in அரசியல்

நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் பன்றி எண்ணெய் கலப்படம் செய்யப்படவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதியமைச்சர் புத்திக பத்திர நாடாளுமன்றத்தில் தவறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் பன்றி எண்ணெய் கலக்கப்படவில்லை எனவும் ராஜித கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய பிரதியமைச்சர் புத்திக பத்திரன, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால் மாவில், பாம் எண்ணெய், பன்றி எண்ணெய் மற்றும் லெக்டோஸ் அடங்கி இருப்பதாக குற்றம் சுமத்தியிருந்தார்.