அரச காணிகள் தனியார் படுத்தும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும்

Report Print Nesan Nesan in அரசியல்

அரச காணிகள் அபகரிக்கப்பட்டு தனியார் மயப்படுத்தப்பட்டு வருகின்றமை தொடர்பில் நாவிதன்வெளி பிரதேச சபையின் 12 ஆவது கூட்டத்தொடரின் அமர்வின் போது உறுப்பினர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாவிதன்வெளி பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தொடர் இன்று தவிசாளர் தவராசா கலையரசன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

நாவிதன்வெளி பிரதேசத்தில் இணங்காணப்பட்ட அரச காணிகள் இல்லாத நிலை எதிர்காலங்களில் ஏற்படும் என பிரதேச சபையின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் அ.சுதர்சன் தவிசாளரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதன்போது தவிசாளர் மேலும் பதிலளிக்கையில்,

நாவிதன்வெளி பிரதேசத்தில் அரச காணிகளை கையகப்படுத்தி வைத்திருக்கும் நபர்களை மக்களின் பிரதிநிதிகளான பிரதேச சபையின் உறுப்பினர்கள் கிராம அபிவிருத்தி சங்கம், பொது அமைப்புக்களின் துணையோடும் அடயாளப்படுத்தி பிரதேச சபைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இதன் மூலம் அரச காணிகளை பிரதேச செயலகத்திற்கு தெரியப்படுத்தி அரச காணிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கை எடுப்பதற்கு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எமது பணிகளை முனைப்புடன் வினைத்திறனோடு எடுக்க வேண்டும்.

அரச காணிகளை தனியாரின் கையகப்படுத்தலின் காரணமாக பொது கட்டிடங்கள், பொது நிகழ்வுகளை நடாத்துவதற்கு அரச காணிகள் இல்லாத நிலை எதிர்காலங்களில் ஏற்படும்.

தனியார் அரச காணிகளை கையகப்படுத்துவதற்கு ஒரு சில அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர் எதிர்காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் பிரேரணைகள், வாதப்பிரதிவாதங்கள் மற்றும் கருத்துக்கள் என்பன கேட்டறியப்பட்டுள்ளன.

Latest Offers