தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக இன்றும் இணக்கப்பாடு ஏற்படவில்லை

Report Print Steephen Steephen in அரசியல்

மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பது சம்பந்தமாக பிரதமரின் செயலகத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்த முடிவுகளும் எட்டப்படாமல் முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் ரவிந்திர சமரவீர மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இவர்களை தவிர தோட்ட முதலாளிமார் சம்மேளனம், தொழிற்சங்க பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டனர்.

தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க முடியாது என முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக எந்த தீர்மானங்களும் எடுக்காது பேச்சுவார்த்தை முடிவடைந்ததாக அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Latest Offers