முக்கியஸ்தர்களுடன் இந்தியாவிற்கு பயணமாகும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த

Report Print Dias Dias in அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் தினங்களில் இந்தியாவிற்கு பயணமாகவுள்ளார்.

இந்தியாவில் வெளியாகும் இந்து பத்திரிகை வெளியிடும் The Huddle சஞ்சிகையின் மூன்றாவது வெளியீட்டில் சிறப்புரையாற்றுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு உத்தியோகபூர்வமாக இந்து பத்திரிகை அழைப்பு விடுத்துள்ளது.

இந்து பத்திரிகை சென்னை பதிப்பின் ஆசிரியர் முகுந் பத்மநாபன் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இது தொடர்பான நிகழ்ச்சி எதிர்வரும் 9ஆம் திகதி கர்நாடக மாநிலம் பெங்களூரில் இடம்பெறவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன், முன்னாள் அமைச்சர்கள் ஜீ.எல்.பீரிஸ், டளஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் உதித்த லொக்குபண்டார, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வெளிவிவகாரம் மற்றும் தொடர்பாடல் பிரிவின் தலைமை பணிப்பாளர்களான கீதநாத் காசிலிங்கம் மற்றும் சமித்திரி ரம்புக்வெல்ல ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்.

மேலும், இந்தியா மற்றும் உலக நாடுகளை சேர்ந்த அரசியல்வாதிகள் உட்பட பல்துறை சார் நபர்கள் இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.