பிரபாகரனுக்கும் அஞ்சாத இரும்பு பெண்! பி.எம்.எஸ் சார்ள்ஸை புகழ்ந்து பேசிய மங்கள

Report Print Murali Murali in அரசியல்

பிரபாகரனுக்கும் அஞ்சாத இருப்பு பெண் என சுங்க திணைக்கள பணிப்பாளர் பி.எம்.எஸ் சார்ள்ஸை புகழ்ந்து பேசிய நிதி அமைச்சர் மங்கள் சமரவீர, அவர் மீது முழுமையான நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார்.

நிதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

சுங்க திணைக்கள பணிப்பாளராக கடமையாற்றி வந்த பி.எம்.எஸ் சார்ள்ஸ் அண்மையில் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு, முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

எனினும், இந்த நியமனத்திற்கு எதிராக சுங்க திணைக்களத்தினர் போராட்டத்தில் குதித்தனர். இதனால், சுமார் 10,000 கொள்கலன்கள் சோதனையிடப்படாமல் முடங்கிப் போனது.

இந்நிலையில், சுங்க திணைக்கள பணிப்பாளராக பி.எம்.எஸ் சார்ள்ஸ் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து, நிதி அமைச்சர் மங்கள சமரவீர, சுங்க திணைக்கள பணிப்பாளர் பி.எம்.எஸ் சார்ள்ஸ் உடன் இணைந்து நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டிருந்தார்.

இதன் போது கருத்து வெளியிட்டிருந்த நிதி அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு கூறியுள்ளார்.

“பி.எம்.எஸ். சார்ள்ஸ் இரும்புப் பெண். எனினும், பிரபாகரனை அச்சமின்றி எதிர்கொண்ட அவருக்கு துறைமுக அதிகாரசபை மாபியா சவாலாக இருந்துள்ளது.

இந்நிலையில், துறைமுகத்தில் இயங்கும் வணிக மாபியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் ஆற்றல், சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பி.எம்.எஸ். சார்ள்ஸ்க்கு இருப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதன் போது நம்பிக்கை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.