வடிவேலு சுரேஷை யார் என்றே தெரியாது! மனோகணேசன்

Report Print Murali Murali in அரசியல்

இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் யார் என்றே தெரியாது என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சிலரை தெரியாமல் இருப்பது நல்லது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு பம்பலப்பிட்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை குறித்து அன்று பேச்சுவார்த்தை இடம்பெற்ற போது ஏன் வாயை மூடிக்கொண்டிருந்தீர்கள் என இன்று சிலர் கேள்வியெழுப்புகின்றனர்.

அன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கம் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுமே இதற்கு காரணம்.

அவர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுகொடுப்பதற்கான சந்தரப்பத்தை வழங்கியிருந்தோம். இந்த பேச்சுவார்த்தையில் நாங்கள் தலையிட்டிருந்தால் இன்று எங்கள் மீது பழிசுமத்தப்பட்டிருக்கும்.

ஆகையினாலேயே அமைதியாக இருந்தோம். எனினும், அவர்களால் 20 ரூபாய் சம்பள அதிகரிப்பையே பெற்றுகொடுக்க முடிந்தது. இந்நிலையில், இப்போது அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும்.

எங்களால் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க முடியும் என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இதன் போது ஊடகவியலாளர் ஒருவர் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷை சம்பள பிரச்சினையுடன் தொடர்புப்படுத்தி கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மனோ கணேசன் “வடிவேல் சுரேஷ் யார் என்றே தெரியாது” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers