முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள்? தலதா தலைமையில் கலந்துரையாடல்

Report Print Mubarak in அரசியல்

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தீர்மானமெடுக்கும் முக்கிய கலந்துரையாடலொன்று அமைச்சர் தலதா அத்துகோரல தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நாடாளுமன்ற குழு அறையில் நேற்று நடைபெற்றுள்ளது.

ஷரீஆ சட்டத்துக்கு முரணாகாத வகையில் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளல், காதி நீதிமன்றங்களை நெறிப்படுத்த வலையமைப்பின் கீழ் கொண்டு வருதல் மற்றும் முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் தயாரித்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன் மற்றும் இராஜாங்க அமைச்சர்களான செய்யித் அலிஸாஹிர் மௌலானா, எச்.எம்.எம். ஹரீஸ், பிரதி அமைச்சர்கள், ஏ.எச்.எம். பௌசி உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers