ஸ்ரீலங்கன் நிறுவனத்தில் நடந்த ஊழல் பற்றி விசாரணைக்கும் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கன், மிஹின் லங்கா விமான சேவைகள் மற்றும் ஸ்ரீலங்கன் கேட்ரிங் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற ஊழல்,மோசடிகள், முறைகேள் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

பதவிக்காலத்தை நீடிக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ளார்.

இதனடிப்படையில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் சில சந்தர்ப்பங்களில் நீடிக்கப்பட்டதுடன் இறுதியாக நீடிக்கப்பட்ட பதவிக்காலம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி நியமிக்கப்பட்ட இந்த ஜனாதிபதி ஆணைக்குழு, ஸ்ரீலங்கன், மிஹின் லங்கா விமான சேவைகள் மற்றும் ஸ்ரீலங்கன் கேட்ரிங் நிறுவனம் ஆகியவற்றில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி வரையான நடந்த ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.