வடக்கு ஆளுநருடன் நோர்வே தூதுவர் பேச்சுவார்த்தை

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்பிஜர்ம் கவுஸ்ட்டசேதர் மற்றும் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோருக்கு இடையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

வடக்கு மாகாணத்தின் தற்போதைய அரசியல் நிலைமைகள், அபிவிருத்தி நடவடிக்கைகள், போர் காரணமாக இடம்பெயர்தோரின் மீள்குடியேற்றம் சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

நோர்வே அரசின் உதவியின் கீழ் வடக்கில் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் தற்போதைய செயற்பாடுகள் சம்பந்தமாகவும் இரண்டு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.

மேலும் வடக்கு மாகாணத்தின் பாதுகாப்பு சம்பந்தமாகவும் நோர்வே பிரதிநிதிகள் கேட்டறிந்துள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் நோர்வே தூதரகத்தின் பிரதிநிதிகளும், ஆளுநரின் செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்ததாக தெரியவருகிறது.