ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியின் சம்பளம் 30 இலட்சம்

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த 2015ஆம் ஆண்டின் பின்னர் ஸ்ரீலங்கன் விமான சேவையின் பிரதான நிறைவேற்று அதிகாரி 30 லட்சம் ரூபாய் மாத சம்பளத்தை பெற்றுள்ளதாகவும், நிறுவனத்தின் முகாமைத்துவத்தில் பணியாற்றும் 7 பேருக்கு சம்பளம் மாதாந்தம் 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் எனவும் கோப் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தொடர்பாக கோப் குழு நடத்திய விசாரணைகள் தொடர்பான தகல்கள் அடங்கிய விபரமான அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் தெரிவிக்கையில்,

அத்துடன் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் மாதம் சம்பளமாக 20 லட்சத்தை பெறும் 38 ஊழியர்கள் இருப்பதாகவும், 10 லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் 209 ஊழியர்கள் இருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் விமானிகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் கொள்வனவு செய்யவிருந்த விமானம் ஒன்றில் விசேட நபர்கள் பயணிக்கும் வகையில் ஆடம்பர அறை நிர்மாணிக்கப்படவிருந்தது. பணிப்பாளர் சபையின் அனுமதியின்றி அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருந்தது.

இதற்காக 15 மில்லியன் டொலர் செலவிடப்படவிருந்தது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கூட்டம் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடத்தப்பட்டுள்ளது.

சாதாரணமாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டம் உலக வர்த்த மையத்தில் உள்ள நிறுவனத்தின் அலுவலகத்திலேயே நடத்தப்படும். அதற்கு மாறாக சபாநாயகரின் இல்லத்தில் நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.