21 மில்லியன் ரூபாவை மீதப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன: பசில் தகவல்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கட்சியில் இருக்கும் போது கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவின் மின்சார கட்டணத்தை செலுத்த முடியாது இருந்ததாகவும் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தை நடத்த பணம் இல்லாத காரணத்தினால், அதனை மூடியதாகவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுகள் அடங்கிய அறிக்கை தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளதாகவும் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையை தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளித்த முதல் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் பங்களிப்பு மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் பங்களிப்புடன் கடந்த ஆண்டு 21 மில்லியன் ரூபாவை மீதப்படுத்த முடிந்துள்ளதாகவும் செலவுகள் தாண்டி 21 மில்லியன் ரூபாயை மீதப்படுத்தியமை குறித்து பெருமைப்படுவதாகவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.