தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் சுமந்திரனா?

Report Print Rakesh in அரசியல்

சம்பந்தன் ஐயா தனக்குள்ள அனுபவத்தை வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சரியான பாதையில் நகர்த்துவார். அனுபவம் இல்லாதவர்கள் எப்படி செய்வார்கள் என்று என்னால் எதுவும் சொல்லமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அவுஸ்திரேலியா சென்றிருந்த அவர் அங்கிருந்து ஒலிபரப்பாகும் எஸ்.பி.எஸ். வானொலி நிகழ்ச்சியில், கூட்டமைப்பின் அடுத்த தலைவர் சுமந்திரனா? என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது கட்சிக்கு ஒரு பொதுக் குழு இருக்கின்றது. பலருக்கும் பல விதமான அபிப்பிராயங்கள் இருக்கும். அந்த இடத்தில் என்ன முடிவு, யார் பொருத்தமானவர்கள் என்று எடுக்கப்போகின்றார்கள் அங்குதான் தெரியும். வெளியில் சொல்வதை வைத்து முடிவெடுக்க முடியாது.

ஒரு மாயை எங்களிடம் உள்ளது. நான்கு விதமாகப் பேசிவிட்டால் அல்லது நான்கு விதமாக ஒன்றை நடத்திவிட்டால் அவர்தான் அடுத்த தலைவர் என்று யோசிப்பார்கள்.

உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த விக்னேஸ்வரன் என்றைக்குமே நிர்வாகம் செய்தது கிடையாது. அவரைக் கொண்டுவந்து நிர்வாகம் செய்வதற்கு வடக்கில் முதலமைச்சராக்கியமையும் இப்படி நடந்த பிழைதான். அதனைக் கட்சி யோசித்துச் செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers