நாட்டுக்கோழியா? புரொய்லர் கோழியா! நகைச்சுவைக் கூடமாக மாறிய நாடாளுமன்றம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

நாட்டுக்கோழி, புரொய்லர் கோழி போன்று அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதால் எது நாட்டுக்கோழி, எது புரொய்லர் கோழி எனக்கண்டுபிடிப்பதில் குழப்பம் ஏற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று 27/2 கீழ் சுற்றுச்சூழல் அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அனுரகுமார திசாநாயக்க கேள்வி எழுப்பியிருந்தார். இக்கேள்விக்கு ஜனாதிபதிக்கு பதிலாக சுற்றுச்சூழல் இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும பதிலளித்தார்.

இதன்போது இடையீட்டுக் கேள்வியொன்றை அனுரகுமார எழுப்பும்போது அஜித் மானப்பெருமவை பிரதி அமைச்சர் என அழைத்தார்.

இதன்போது அரச தரப்பிலிருந்து சிலர், பிரதி அமைச்சர் அல்ல இராஜாங்க அமைச்சர் எனக்கூறினர். அதேபோன்று அனுரகுமார பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரணவிடம் ஏதோவொன்று கேட்க முற்பட்டபோது, நீங்கள் பிரதியா ? இராஜாங்கமா? எனக் கேட்டார்.

இதன் பின்பே அநுரகுமார திசாநாயக்க நாட்டுக்கோழி, புரொய்லர் கோழி போன்று அமைச்சர், பிரதி அமைச்சர், இராஜாங்க அமைச்சர், அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சு என அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்டுள்ளதால் எது நாட்டுக்கோழி, எது புரொய்லர் கோழி எனக் கண்டுபிடிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அமைச்சுப்பதவிகள் அடிக்கடி மாறுவதால் யாருக்கு என்ன பதவி என்பது தெரியாமலுள்ளதாகவும் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.