அமெரிக்கா ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய ஜே.வி.பி

Report Print Steephen Steephen in அரசியல்

அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் வெனிசூலா மக்களின் முற்போக்கான ஆட்சியை வீழ்த்த பல சூழ்ச்சிகளை செய்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள முற்போக்கான மக்கள், அமெரிக்கா கையாண்டு வரும் போர் ரீதியான ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

வெனிசூலாவுக்கு எதிரான ஏகாதிபத்திய தலையீடுகளை தோற்கடிப்போம் என்ற தலைப்பில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ரில்வின் சில்வா,

அமெரிக்கா, ஜனநாயகம் பற்றி பெரிதாக பேசினாலும் வெனிசூலா மக்கள் தமது வாக்குகளால் தெரிவு செய்த நீதியான அரசாங்கத்தை கவிழ்க்க அமெரிக்கா சூழ்ச்சி செய்து வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் அமெரிக்க தூதரகத்திடம் மகஜர் ஒன்றையும் மக்கள் விடுதலை முன்னணியினர் கையளித்துள்ளனர்.

அமெரிக்கா, வெனிசூலாவின் எண்ணெய் வளத்தை கைப்பற்ற அந்நாட்டில் அரசியல் ரீதியான சூழ்ச்சிகளை செய்து வருவதுடன் அந்நாட்டுக்கு எதிரான பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது.