மாகந்துர மதூஸ் கும்பலுக்கும் அரசியல்வாதியின் மகனுக்கும் தொடர்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

மாகந்துர மதூஸ் உள்ளிடட போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகனுக்கும் தொடர்பிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது என இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவெல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினரான உதய கம்பன்பில ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்து, டுபாயில் மாகந்துர மதூஸ் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலை அந்நாட்டு பொலிஸார் கைது செய்தபோது இலங்கை இராஜதந்திர கடவுச்சீட்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளிட்டுள்ளது.

அந்த இலங்கை இராஜதந்திர கடவுச்சீட்டுக்கு உரியவர் யார் என நான் இச் சபையில் புதன்கிழமை கேள்வி எழுப்பியபோது பின்னர் பதில் வழங்குவதாகக் கூறப்பட்டது. எனினும் இன்னும் பதில் கிடைக்கவில்லை என்றார்.

இதன்போது எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதனால் தற்போது எதனையும் கூறமுடியாது என்றார்.