மட்டக்களப்புக்கு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது விஜயம் இறுதி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று காலை கிராம சக்தி கிழக்கு மாகாண வேலைத்திட்டம் தொடர்பிலான கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவிருந்தது.
எனினும், இன்று காலை 10.00 மணிக்கு வருகைதரவிருந்த நிலையில் அனைத்து அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் டேபா மண்டபத்திற்கு வருகைதந்த போதிலும் இறுதியில் ஜனாதிபதியின் வருகை ரத்துச் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
காலையில் பலத்த சோதனைகளுக்கும் கெடுபிடிக்கும் மத்தியிலும் நிகழ்வுக்கு வந்தோர் விசனமடைந்து சென்றதை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.