பொய்யான குற்றச்சாட்டுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரும் நிதி அமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்

மாகந்துரே மதுஷூடன் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரான தனது செயலாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறிய நபர்கள், ஊடகங்கள் மற்றும் ஏனையோர் தொடர்பாக விரிவான விசாரணைகளை நடத்துமாறு அமைச்சர் மங்கள சமரவீர, பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றின் பிரதியையும் அமைச்சர்கள் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.

அக்கடிதத்தில்,

துபாயில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் யார்? ஒரு விசாரணை கோரிக்கை

1. முன்னணி குற்றவியல் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர் மாகந்துரே மதுஷ் மற்றும் அவருடன் துபாயில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தற்போது நாட்டில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

2. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நபர்களில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரான எனது ஊடக செயலாளர் இருப்பதாகவும் அவருக்கு நான் ராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொடுத்திருப்பதாகவும் கடந்த சில தினங்களாக சமூக ஊடங்கள் சில செய்திகளை வெளியிட்டிருந்தன.

3. அந்த செய்தி முற்றிலும் ஆதாரமற்றது என நான் நேற்று முன்தினம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் வலியுறுத்தி குறிப்பிட்டிருந்தேன். ஆனால், நேற்று (07) நடத்தப்பட்ட சில செய்தியாளர் சந்திப்புகளில் மகக்ள் பிரதிநிதிகள் சிலர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து கருத்து வெளியிட்டிருந்ததுடன் அதனை தனியா் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருந்தன.

4. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தெனுக வித்தானகமகே, “ பாதாள உலக தலைவர் மாகந்துரே மதுஷூடன் துபாயில் கைது செய்யப்பட்டுள்ள ராஜதந்திர கடவுச்சீட்டை கொண்ட நபர், நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் செயலாளர்” எனக் கூறியிருந்தார்.

5. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் திலான் பெரேரா, உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்குவதன் மூலம் நிதி அமைச்சரின் செயலாளரால் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடக பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, நிதியமைச்சருடன் இருக்கும் செயலாளர் ஒருவர் ஊடாகவே ராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

“ பாரியளவில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நிதியமைச்சரின் மடியில் இருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

6. இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் எனது 30 ஆண்டுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற வாழ்க்கையின் புகழை வேண்டுமென்றே சேதப்படுத்தவும் போதைப் பொருளுடன் வர்த்தகத்துடன் சம்பந்தப்பட்ட உண்மையான நபர்களை காப்பாற்றும் நோக்கம் கொண்டவை.

ராஜபக்ஷ ஆட்சியில் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களுக்கு அரசியல் ரீதியான பாதுகாப்பு வழங்கப்பட்ட மோசமான வரலாற்றை நாட்டு மக்கள் இன்னு மறக்கவில்லை.

7. இதனால், மாகந்துரே மதுஷூடன் கைது செய்யப்பட்டவர்கள் எனது ஒருங்கிணைப்பு செயலாளர் எனவும் அவருக்கு நான் ராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொடுத்துள்ளதாக வெளியிடப்பட்டு வரும் செய்திகள் சம்பந்தமாக மிக விரைவான விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை நாட்டுக்கும், மக்களுக்கு தெரியப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

8. மேலும், மாகந்துரே மதுஷூடன் தொடர்புகளை கொண்டிருந்த அரசியல்வாதிகள் குறித்தும் குறிப்பாக அவர் நாட்டில் இருந்து தப்பிச் செல்லும் வகையில் அவரை பாதுகாப்பாக விமான நிலையம் வரை அழைத்துச் சென்ற மக்கள் பிரதிநிதிகள் யார் என்ற விடயம் தொடர்பாகவும் விசாரணை நடத்துமாறு கோருகிறேன்.

9. அத்துடன் இந்த விடயம் சம்பந்தமாக என்னை பற்றி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அந்த கருத்துக்களை விசாரித்து அறியாது வெளியிட்ட ஊடக நிறுவனங்களின் பொறுப்புக் கூற கூடிய நபர்களிடம் இது சம்பந்தமாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறும் கோருகிறேன்.

10. என் மீது ஊடகங்களுக்கு மத்தியில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நபர்கள், அவற்றை பொறுப்பின்றி வெளியிட்ட இலத்திரனியல், அச்சு ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க ஆயத்தங்களை செய்து வருகிறேன்.

11. விசாரணைகளுக்கு உதவியாக சம்பந்தப்பட்ட செய்திகளின் காணொளி பதிவுகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை இத்துடன் இணைத்துள்ளேன்.

என குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers