இராஜதந்திர கடவுச்சீட்டு உடைய எவரும் டுபாயில் கைதாகவில்லை

Report Print Kamel Kamel in அரசியல்

இராஜதந்திர கடவுச்சீட்டு உடைய எவரும் டுபாயில் கைதாகவில்லை என உள்விவகார அமைச்சர் ஜே.சீ. அலவத்துவல தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாதாள உலகக்குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட சிலர் அண்மையில் டுபாயில் கைது செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், இந்தக் கும்பலில் எவரிடமும் இராஜதந்திர கடவுச்சீட்டு இருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தின் மீது சேறு பூசும் நோக்கில் இவ்வாறு பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த விடயம் குறித்து குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம் வினவியதாகவும் அவ்வாறு எவருக்கும் இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்படவில்லை என அவர் கூறியதாகவும் ஜே.சீ. அலவத்துவல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இராஜதந்திர கடவுச்சீட்டு உடைய நபர் ஒருவர் இந்தக் கும்பலில் இருந்ததாக டுபாய் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

Latest Offers